தொடர்ந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி …!வெளியேறினர் குக் …!
இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது.
இங்கிலாந்து அணி 66 ஓவர்களில் 134 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக குக் 71 ரன்கள் அடித்தார். களத்தில் மொயீன் அலி 29 ரன்னுடனும்,ஸ்டோக்ஸ் 0 ரன்களுடனும் உள்ளனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 2,சர்மா மற்றும் ஜடேஜா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.