தொடர்ந்து கலக்கும் ப்ரித்வி ஷா..வம்பிழுத்த சிராஜ்…பேட்டால் பதிலடி…வைரலாகும் வீடியோ…!!

Default Image

விஜய் ஹசாரே தொடரின் ஒரு போட்டியில் தொடர்ந்து பவுன்சர்களாக வீசி சிராஜ் வம்புக்கு இழுக்க, அதனை எதிர்கொண்ட ப்ரித்வி ஷா பேட்டால் பதில் கூறியுள்ளார்.
முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவர், மொத்தம் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்க்க வைத்தார். சிறிய வயதிலேயே அவரது பேட்டிங் அபாரமாக உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது மும்பை அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷா, ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட விதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஆட்டத்தின் 19-வது ஓவரை வீசிய முகம்மது சிராஜ், பவுன்சர்களாக வீசித் தாக்கினர். முதல் இரண்டு பந்துகளை சமாளித்த ப்ரித்வி ஷா, மூன்றாவது பவுன்சரில் சற்று நிலை குலைந்தார். அப்போது, சிராஜ் ஏதோ கூற, பதிலுக்கு ப்ரித்வியும் ஏதோ பதிலளிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
https://twitter.com/NaaginDance/status/1052492846618603523
சிராஜ் வீசிய அடுத்த மூன்று பந்தில், முதலிரண்டை சிக்சருக்கு அனுப்பிய பிரித்திவி, கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ப்ரித்வியின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத சிராஜ் ஏமாற்றம் அடைந்தார்.
https://twitter.com/NaaginDance/status/1052493738973560832
இந்தப் போட்டியின் குறுக்கே மழை வந்ததன் காரணமாக வி.ஜே.டி முறைப்படி 60 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்