தொடரை இழந்த இந்திய அணி …!இருந்தாலும் சாதனைகளை தெறிக்க விட்ட ரிசத் பண்ட் …!
நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்று 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் பண்ட் 114 ரன்கள் அடித்தார்.இதன்மூலம் அவர் சாதனைகளை படைத்துள்ளார்.
ரிசத் பண்ட் மிகவும் குறைந்த வயதில் சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அஜய் ராத்ராவை தொடர்ந்து இரண்டாவதாக இடம் பிடித்துள்ளார்.
மற்றொரு சாதனையாக, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பரில்(114 ரிஷப் பண்ட்) முதலிடம் பிடித்துள்ளார்.