துபாயில் துவங்கியது..!14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா..!6 அணிகள் பங்கேற்பு..!!

Default Image

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

Related image

வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.

Related imageசூப்பர்-4 சுற்றை எட்டும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் இருந்து டாப்-2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

கடினமான இங்கிலாந்து தொடரில் இடைவிடாது ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா, ஆசிய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

Image result for asia cup 2018 rohit sharmaஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் விளாசிய ஒரே வீரரான ரோகித் சர்மா மற்றும் டோனி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா போன்ற தரமான பேட்ஸ்மேன்களுடன், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகிய சிறந்த பவுலர்களும் அங்கம் வகிப்பதால் இந்திய அணி வலுவாகவே காணப்படுகிறது.

Related imageதனது முதல் லீக்கில் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்குடன் (18-ந்தேதி) மோதும் இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே (19-ந்தேதி) பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. அது மட்டுமின்றி சூப்பர்-4 சுற்றிலும் பாகிஸ்தானை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த முறை ரசிகர்களுக்கு ‘இரட்டை விருந்து’ காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Related imageவிக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், ஹசன் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கு உள்ளூர் போன்றது. கடந்த 8 ஆண்டுகளாக அந்த அணி தங்களது உள்நாட்டு போட்டிகளை இங்கு தான் விளையாடி வருகிறது. இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை பாகிஸ்தான் அணிக்கு அத்துபிடியாகும். இது பாகிஸ்தானுக்கு அனுகூலமான விஷயமாகும்.

இதே போல் முன்னாள் சாம்பியன் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை, மோர்தசா தலைமையிலான வங்காளதேசம் ஆகிய அணிகளும் கோப்பையை உச்சிமுகர வேண்டும் என்பதில் தீவிரம் கட்டுவதால் ஆசிய கோப்பை போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related imageதொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை-வங்காளதேச அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதே சமயம், மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்கு திரும்பியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை 23 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2-வது பேட் செய்த அணியே 15 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது இங்கு ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 2011-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 131 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை துவங்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்