தீபாவளிக்கு வானவேடிக்கை காட்டிய ரோகித்….சர்வதேச அளவில் மீண்டும் ஒரு மைல்கல்…!!!
இந்திய வீரர் ரோகித் சர்மா இந்தியா -வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 வது டி20 போட்டியில் வானவேடிக்கை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்டத்தியுள்ளார்.
நேற்றும் முன்தினம் இந்திய-வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய வீரர் சதம் அடித்து அசத்தினார் இதன் மூலம் சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
தீபாவளியன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா த்னது பங்கிற்கு 197 ரன்களை குவித்தது. ரன்கள் மலமலவென குவிவதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா. அவர் சந்தித்த 58 பந்திலே சதம் அடித்து அசத்தினார்.அவுட்டாகமல் தொடர்ந்து விளையாடிய ரோகித் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரோகித் சர்மாவின் இந்த சதம் மூலம் டி20 போட்டியில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்களில் நியூசிலாந்து வீரர் கொலின் முன்றோ மூன்று சதங்களுடன் 2-வது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் மற்றும் மார்ட்டின் கப்தில் இரண்டு சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.இந்திய வீரர் ரோகித் சர்மா 86 டி20 போட்டியில் 4 சதம், 15 அரைசதங்களுடன் 2203 ரன்கள் குவித்துள்ளார்.மேலும் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் நீடிக்கிறார்.
DINSUVADU