திட்டமிட்டு ராயுடு,சாம்சன்,ஷமி ஓரம்கட்டப்பட்டார்களா? அணித் தேர்வு செய்தபின்தான் எப்படி ‘யோ யோ’ டெஸ்ட் நடத்தலாம்?

Default Image

ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட யோ யோ, டெக்ஸா சோதனையால்தான் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போயுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

இந்திய அணி நிர்வாகத்துக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தால், இங்கிலாந்து செல்லும் இந்திய அணியைத் தேர்வு செய்தபின்தான் வீரர்களுக்கு யோ யோ, டெக்ஸா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Image result for RAYUDA  SHAMI YO YO TEST

இதில் யோ யோ சோதனை என்பது, வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்றும் வேகமாகக் குனிந்து, வளைந்து செல்ல முடிகிறதா என்பதை அறியும் சோதனையாகும், டெக்ஸா சோதனை என்பது, எலும்பு வலிமையை அறியும் சோதனையாகும்.

இதில் யோ யோ சோதனையில் இந்திய வீரர் ஒருவர் குறைந்தபட்சம் 16.1 மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் அணிக்குத் தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்த மதிப்பெண்களைப் பெறாத காரணத்தால்தான் சாம்ஸன், ஷமி, ராயுடு அணிக்குத் தேர்வாகி, இங்கிலாந்து செல்லும் அணிக்குள் இடம் பெறமுடியவில்லை.

Image result for RAYUDA  SHAMI YO YO TEST

சஞ்சு சாம்ஸனால் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் இடம் பெறமுடியவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை, அதற்குப் பதிலாக நவ்தீப் சிங் இடம் பெற்றார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ராயுடுவுக்கு இடம் கிடைக்காமல், சுரேஷ் ரெய்னா இடம் பெற்றார்.

இலங்கைக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போதிருந்து இந்த யோ யோ, டெக்ஸா டெஸ்ட் வீரர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வாகவில்லை என்பதால், அவர்கள் கைவிடப்பட்டனர்.

Image result for RAYUDA  SHAMI YO YO TEST

பொதுவாக யோ யோ, டெக்ஸா சோதனையில் தேர்வாகும் வீரர்கள் நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடத்தில், உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்பவர்களால்தான் தேர்வாக முடியும். அப்படி இருக்கும் போது வீரர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்காமல் சோதனை நடத்தும் போது எப்படித் தயாராவார்கள் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

 

இந்திய வீரர்களுக்கு யோ யோ சோதனையில் தேர்வாக 16.1 புள்ளி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது நியூசிலாந்து வீரர்களுக்கு அதிகபட்சமாக 19 மதிப்பெண்ணாகவும், பாகிஸ்தான் வீரர்களுக்கு 17 மதிப்பெண்ணாகவும் இருக்கிறது. ஆதலால், நம்முடைய வீரர்களைக் காட்டிலும் அவர்கள் நல்ல உடற்தகுதியுடனே இருப்பார்கள்.

இந்த இரு சோதனைகளும் நடத்தப்படும் முன் வீரர்களுக்கு முறைப்படியான அறிவிப்புகள் வழங்க வேண்டிய அணி நிர்வாகம், பிசிசிஐ அமைப்பின் கடமையாகும் ஆனால், இரு தரப்புக்கும் தகவல்தொடர்பின்மையால், வீரர்களுக்கு திடீரென்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், யோ யோ டெஸ்ட், டெக்ஸா டெஸ் ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டு அதில் தேர்வாகும் வீரர்களின் அடிப்படையில் அணி வீரர்களைத் தேர்வு செய்தால், அணித் தேர்வு சரியாக இருக்கும். இங்கிலாந்து தொடருக்கான வீரர்களை அறிவித்துவிட்டு, அதில் உள்ள வீரர்களுக்கு இந்த இரு சோதனைகளையும் நடத்தி வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்புவது என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பது கேள்வியாக வீரர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து தேசிய கிரிக்கெட் அகெடமியின் தலைவர் நிர்ஞ்சன் ஷாவிடம் கேட்டபோது, யோ யோ, டெக்ஸா டெஸ்ட் குறித்து ஏதும் தெரியாது, முன்கூட்டியே எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லையே எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய வீரர்களுக்கு யோ யோ, டெக்ஸா டெஸ்ட் நடத்துவது குறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு இந்திய அணி நிர்வாகமும், தேசிய கிரிக்கெட் அகாடெமியும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்