கிரிக்கெட் வீரர் மஹிந்திர சிங் தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன். ஐபிஎல் 2018 வயதான வீரர்கள் இடம்பெற்றுள்ள அணி என்று விமர்சிக்க பட்டபோதிலும் அந்த அணிதான் 2018 பட்டத்தை தட்டிச்சென்றது.இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றபோது அனைவரும் தோனியைப் புகழ்ந்து தள்ளிய நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும் என்றார் தோனி மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத மிகத் தூயவர்.
மேலும் அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் உயரவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த செயல்களை செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்லா அவர் நாட்டுக்காகவும் என தனது ட்விட்டரில் தெரிவித்தார்.அதன்பிறகு மே.இ.தீவுகள் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டு ஓய்வு அளிக்கப்பட்டபோது இதயம் நொறுங்கியது என்றும் தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி20 அணியா? மோசமான அணித்தேர்வு குழு என்று பிசிசிஐ கடுமையாக விமர்சித்த விக்னேஷ் உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும். தலைவன் தோனி இல்லாமல் நீங்கள் ஆணியைக்கூட புடுங்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று ரசிகரொடு ரசிகராய் கொதித்தெழுந்தார்,
இந்தநிலையில் தற்போது தல என்று அஜித்திற்கு பிறகு அன்போடு அழைக்கப்படும் தோனியை நேரடியாகச் சந்தித்துள்ளார் விக்னேஷ்.சந்திப்பு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்தோனியைக் காண வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே இது சந்தோஷமான மிகவும் திருப்தியான தருணம்.இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றிகள்.மேலும் அவர் ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண நான் காத்திருக்கிறேன்.
இது #என்னுடைய_கனவு என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தோணி என்றே இங்கே அவருக்கு ரசிக பட்டாளம் அதிகம் தான் ஒரு ரசிகனார் இயக்குநர் விக்னேஷ் சிவன் கனவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.இப்பொழுது எல்லாம் தோனியை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்ற பெயரில் ஓரம் கட்டுகீறார்கள் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.
DINASUVADU