தலை முடியில் தலைவன்…அசத்திய ரசிகன்- சிலிர்க்க வைக்கும் ஹேர்ஸ்டைல் பின்னனி
- தலையில் கோலியின் உருவத்தை சிகை அலங்காரம் செய்து வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.
- கோலியை சந்திப்பதே தன் கனவு என்று ரசிகர் உருக்கம்
உலகில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது ஒரு ரசிகர் தன் தலையில் கோலியின் உருவத்தை வரைந்த சம்பவம் ரசிக்க வைத்துள்ளது.கடந்த செவ்வாய் கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் ஆட்டத்தை காண வந்த ஒரு ரசிகரை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
காரணம் கோலியின் முகத்தை அப்படியே தனது தலையின் பின்புறத்தில் சிகை அலங்காரமாக வரைந்திருந்தார்.இவ்வாறு வெறித்தனமான அன்பை வெளிப்படுத்திய ரசிகர் பெயர் சிராக் கிளாரே என்வர் தான் அந்த ரசிகர்.ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு களிக்க வந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில் சிறந்தவரான கோலி இதயத்தில் இருந்து தலைக்கு என அதில் பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் போட்டி தொடங்குவதற்கு முன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிராக் இந்திய அணி கேப்டன் விராட் மீதான தனது அன்பை பற்றி குறிப்பிட்டு சொன்னார் அதில் பல ஆண்டுகளாக கோலியின் ஒவ்வொரு பேட்டிங்கையும் விடாமல் கண்டு ரசித்து வருகிறேன்.
இந்த ரசிப்பு ஆனது அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்தபோதிலிருந்து அவருக்கு நான் ரசிகராக இருந்து வருகிறேன்.கோலியை சந்திப்பதே என் வாழ்நாள் கனவு .நான் அவரைச் சந்திக்கும் போது,முதலில் அவரது கால்களைத் தொட்டு வணங்குவோன் பின் அவரை கட்டுப்பிடிப்பேன்..இந்த தருணத்தை எல்லாம் ஒரு புகைப்படமாக எடுப்பேன் என்று தெரிவித்தார்.