ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்னணையாளராக இருந்து வருகிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் டி-20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இதன் மூலம் சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நபராகவும் விளங்கி வருகிறார் ஹைடன்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது மகனுடன் குயின்ஸ்லாந்து கடற்கறைக்கு சென்ற போது அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஹைடன், எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார்.
இதில் அவருக்கு முதுகு, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதுடன் எழும்பு முறிவும் ஏற்பட்டது.
இதனிடையே தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவனாக திகழ்ந்த ஜாண்டி ரோட்ஸ், காயம்பட்ட மேத்யூ ஹைடனை கலாய்த்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஹைடன், உங்கள் முன்தலையில் அணிந்திருப்பது தமிழ்நாட்டின் வரைபடமா (Map)? உண்மையான அர்ப்பணிப்பு நண்பா!!! நம்மில் சிலர் டாட்டூ போன்ற எளிய வழிகளையே தேர்ந்தெடுப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அவரது தலையில் இருக்கும் காயத்தை தமிழ்நாட்டின் வரைபடத்துடன் ஜாண்டி ரோட்ஸ் ஒப்பிட்டு, தமிழக ரசிகர்களுடனான ஹைடனின் நெருக்கம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மேத்யூ ஹைடன் சென்னை அணி ரசிகர்களுடன் அதிகமாக நட்பு பாராட்டியதுடன், தமிழக பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி, சட்டை அணிந்து தனது டிவிட்டரில் புகைப்படங்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…