தமிழில் தந்தையர் தினத்தன்று பாசத்தை கொட்டிய தீர்த்த ஹர்பஜன் சிங்க்!
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஈடு இணை இல்லா அற்புதம் நீ” என்று தந்தையர் தினத்தன்று தன்னுடைய பாசத்தை தமிழில் கொட்டி தீர்த்துள்ளார் .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங். தமிழ் மீது அலாதி பிரியும் கொண்ட அவரின் ட்விட்டுகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையை தெய்வமாகவும், ஈடு இணை இல்லாத அற்புதமாகவும் அவர் புகழ்ந்துள்ளது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த பதிவில் அவர் தன்னுடைய தந்தை போட்டோவும், அவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அந்த ட்வீட்டை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட #அப்பா pic.twitter.com/XCOIQaoNAT
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 17, 2018