டேல் ஸ்டெயின் கனவு அணியில் கோலிக்கு இடமில்லை!அதிரடி வீரருக்கும்,லிட்டில் மாஸ்டருக்கும் தான் இடம்!
தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் அவரது சிறந்த உலக டெஸ்ட் XI அணியை ஒரு கனவு அணியாக தேர்வு செய்துள்ளார்.
அணியின் கேப்டனாக கிரேம் ஸ்மித் தேர்வு செய்துள்ளார்.ஏனெனில் அவர் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் சராசரியாக 50 ரன்கள் எடுத்தார். எனவே அவர் கேப்டனாக இருந்தும் சிறந்த ஓபனராக இருக்கிறார்.
கடந்த 25 ஆண்டுகளில் கிரிக் இன்போ மேத்யூ ஹேடன்னுடன் தொடக்க வீரராக சேவாக்கை அறிவித்தது.
தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் தன்னுடைய அணியில் சேவாக்கை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார்.ஏற்கனவே ஸ்மித் ஒரு ஓபனராக தேர்வு செய்த நிலையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக சேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் சேவாக் குறித்து ‘சேவாக்குக்கு பந்து வீசுவது கடினம், அவர் ஆறு பந்துகளில் பிரித்து மேய்வார், பிறகு எங்கள் கேப்டன் எங்களிடம் வந்து சிறிது அமைதியாக பேசுவார். இந்தியாவில் அதிகம் ஸ்விங் பெரிதாக இருக்காது,சேவாக் கவர், பாயிண்ட் திசையில் வெளுத்து வாங்குவார், ஒவ்வொரு முறையும் பந்தை நன்றாக மிடில் செய்வார்.
தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பந்து அதிகம் ஆதிக்கம் செலுத்தும்.சென்னையில் சேவாக் தென் ஆப்பிகாவிற்கு எதிராக 300 ரன்கள் எடுத்தார். ‘
தென் ஆப்ரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் கனவு அணி:
சேவாக்,கிரம் ஸ்மித் (கேப்டன்) ஹஷிம் அம்லா, சச்சின் டெண்டுல்கர், ஜாக் கல்லீஸ், குமார் சங்கக்கார (விக்கெட் கீப்பர்), வில்லியர்ஸ், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா.
12 மற்றும் 13 வது வீரர் ஆலன் டொனால்ட், ஜந்தி ரோட்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .