டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்- ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின்..!

Published by
Dinasuvadu desk

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார்.

அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 57 டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஜாகீர் கான் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறி ஜாகீர் கானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago