டெஸ்ட் சாம்பியன்ஷிப், திட்டத்தை வெளியிட்டது ஐசிசி..!

Default Image

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு இடையில் கால்பந்து தொடரில் நடைபெறும் லீக் போன்று சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது. இதுகுறித்து அனைத்து கிரிக்கெட் வாரியத்திடமும் பேசியது. பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில் ஐசிசி வருங்கால சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 முதல் 2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் இன்றும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு ஐசிசி டெஸ்ட் லீக் தொடருக்கு அனுமதி அளித்தது. ஐசிசி தரவரிசையில் முதல் 9 இடத்தில் இருக்கும் அணிகள் இந்த லீக்கில் விளையாட அனுமதிபெறும். ஒவ்வொரு அணிகளும் தலா 6 தொடரில் விளையாட வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.


ஐசிசி ஒருநாள் லீக்கில் தற்போது தரவரிசையில் இருக்கும் 13 அணிகளுடன், உலகக்கோப்பை லீக் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் இடம்பெறும். இதில் ஒவ்வொரு தொடரில் மூன்று போட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த  லீக் 2020 முதல் 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாத் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடருக்குள் வராது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இதில் எடுத்துக்கொள்ளமாட்டாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்