டெஸ்ட் உலகில்’ 6000′ ரன்களை..! முத்தமிட்டு விரட்டிய விராட் கோலி..!!

Default Image

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தம்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

Related image

விக்கெட் இழப்பின்றி 19 ரன்களுடன் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்த நிலையில் ஷிகர் தவன் 23 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

Image result for virat kohli

அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், சட்டேஷ்வர் புஜாராவும் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியோடு, மெதுவாக ரன்களையும் சேர்த்தனர். 22-வது ஓவரில் ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் 6000 ரன்களை கடந்தார். மேலும், கவாஸ்கருக்கு அடுத்தப்படியாக குறைந்த இன்னிங்சில் 6000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

Related image

புஜாராவும், கோலியும் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த வீரர்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும், அசராத புஜாரா, தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். 210 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் விளாசினார்.

Image result for pujara

சட்டேஷ்வர் புஜாராவின் சதத்தால், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்