டி20 போட்டியில் 130 ரன்கள் குவித்து டேவிட் வார்னர் அசத்தல்..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவருக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து வார்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்தார்.
இதற்கிடையே, உள்ளூரில் நடைபெறும் தரம் குறைந்த கிரிக்கெட் தொடரிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரிலும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. கனடாவில் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் குளோபல் டி20 லீக் தொடரில் வார்னர் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வார்னர் கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரிஸ்பேன் ஆலன் பார்டன் ஓவலில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் 130 ரன்கள் விளாசினார். இதில் 18 சிக்சர்கள் அடங்கும்.
பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்தது வார்னருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்வேகத்துடன் அவர் கனடா குளோபல் டி20 லீக் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.