இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.அடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் கோலி (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்து 202 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கோலி 26 ரன்களுடன் மைதானத்தை விட்டு சென்றாலும் சர்வதேச டி20 வரலாற்றில் தன்னுடைய சாதனை எழுதிவிட்டு சென்றார்.ஆம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 11000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்து விராட் கோலி அசத்தி உள்ளார்.253 இன்னிங்ஸில் விளையாடி 11000 ரன்களைக் கடந்த கிரிக்கெட் கடவுள் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ,196 இன்னிங்ஸிலே கோலி காலி செய்து முறியடித்து சாதனை படைத்து உள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் பட்டியலில் (250) பவுண்டரிகளை விளாசிய கோலி முதல் இடம் பிடித்து சாதனைப் படைத்து உள்ளார்.மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா (234) பவுண்டரிகளுடனும், ஸ்டிர்லிங் ( 233) பவுண்டரிகள் ,தில்சன் ( 223) பவுண்டரிகள் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…