சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிக்கத் தயாராகுங்கள் …!நாளை முதல் விசில் அடிக்க கவுன்டர்கள் தொடக்கம் …!
திங்கள்கிழமை (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர பெரும்பலானோர் புதிய வீரர்களாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் 2-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
போட்டிகளைக் காண குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சி,டி,இ, தளத்துக்கு இந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின் முதல் வகுப்புக்கான டிக்கெட் ரூ.5 ஆயிரம், மற்றும் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும்.
டிக்கெட்டுகளை கவுன்ட்டரில் வந்து நேரடியாக வாங்கும் நபர் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்.காம், புக்மைஷோ.காம் ஆகிய தளத்தில் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.