சுனில் சேத்ரிக்கு மருந்து அளித்த டிக்கெட்டு விற்பனை!சுனில் சேத்ரியின் கண்ணீரைத் துடைத்த மக்கள்!விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Default Image

மும்பை மக்கள்  இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கண்ணீரை துடைத்துவிட்டனர். இன்று இரவு நடைபெறும் கால்பந்துப் போட்டிக்கான மொத்த டிக்கெட்டுகளும்விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்துப் போட்டி மும்பையில் இன்டர்கான்டினென்டல் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, சீனாவில் சீனத் தைப்பே அணியுடன் நேற்று முன்தினம் மோதிய போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில்  வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன.

இது குறித்து மிகுந்த வேதனையுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் அதில் கூறுகையில், இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, குர்னல் பாண்டியா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்கள் கால்பந்து போட்டிக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்துப் போட்டிகளும் சரிசமமான முக்கியத்துவத்தோடு வளர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்குக் கால்பந்து போட்டிக்கு அனைத்து ரசிகர்களும் முடிந்தவரை ஆதரவு அளிக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கால்பந்து அரங்கில், இந்தியா- கென்யா அணிகளுக்கு இடையிலான கால்பந்து லீக் போட்டி நடைபெற உள்ளது. சுனில் சேத்ரியின் கோரிக்கையை ஏற்று இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை மக்கள் சுனில் சேத்ரியின் கண்ணீரைத் துடைக்கும் விதத்தில் பதில் அளித்துள்ளனர்.

இணையதளத்தில் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.மைதானத்தில் உள்ள அனைத்து இருக்கைக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுனில் சேத்ரியின் கோரிக்கையும், வேண்டுகோளையும் மும்பை மக்கள் ஏற்றுக்கொண்டு இந்த போட்டியைக் காண தயாராகிவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்தப் போட்டி 100-வது கால்பந்துப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்