சிறு வயதில் செய்த வேலையை மீண்டும் தொடங்கிய சச்சின்! சாலையில் இளைஞர்களுடன் கிரிக்கெட்!திக்குமுக்காடிய இளைஞர்கள்!வீடியோ
இளைஞர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் சாலையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் மட்டுமின்றி சமூகநலன் மீதும் சச்சின் அக்கறை கொண்டவர் என்பதை அவ்வப்போது சாலையில் பொதுமக்களிடம் ஹெல்மெட் அணியச் சொல்லி அறிவுறுத்துவார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும். ஆனால் இந்த முறை அவரது வைரலாகும் வீடியோவில் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினினுடன் விளையாடிய வினோத் கம்பளி அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில், சச்சின் காரில் இருந்து இறங்கி சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் தானும் விளையாடி மகிழ்ந்தார். இதனால் சந்தோஷத்தில் இளைஞர்கள் திக்குமுக்காடி விட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.