இங்கிலாந்து அணியுடனான உடனான போட்டியில் இந்திய அணி வீரர் பண்ட் சதம் அடித்துள்ளார்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இதன் பின்னர் ராகுல் மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.
ஏற்கனவே ராகுல் சதம் அடித்த நிலையில்,பண்ட் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார்.இது இவருக்கு முதலாவது சதம் ஆகும்.இவர் 117 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.சிக்ஸர் உதவியுடன் தனது சதத்தை அடித்துள்ளார் .சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கு முதல் சதம் ஆகும்.
தற்போது வரை இந்திய அணி 74 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ராகுல் 141 ,பண்ட் 101 ரன்களுடனும் உள்ளனர்.மேலும் தேனீர் இடைவேளை விடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…