2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்கினார். அப்போது தோனி மீதிருந்த மரியாதை கலந்த பயத்தால் அவரை ‘சார்’ என அழைத்துள்ளார் சஹல். அப்போது, தன்னை ‘சார்’ என அழைக்க வேண்டாம் என்று தோனி கூறியதாக சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, யுஸ்வேந்திர சஹல் பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஜிம்பாப்வேயில் தோனியை முதல்முறையாக சந்தித்தபோது அவரை மாஹி சார் என அழைத்தேன். சிறிது நேரத்துக்குப் பின் என்னை அவர் அழைத்தார். அப்போது, மாஹி, தோனி, மகேந்திர சிங் தோனி, அண்ணா என எப்படி வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடு. ஆனால், சார் என்று மட்டும் கூப்பிடாதே என தோனி கூறினார் என்று அந்தப் பேட்டியில் சாஹல் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் கடந்த 2014-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…