‘சார்’ என்று என்னை அழைக்காதே சக வீரரிடம் தோனி வலியுறுத்தல் ..!

Default Image

2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்கினார். அப்போது தோனி மீதிருந்த மரியாதை கலந்த பயத்தால் அவரை ‘சார்’ என அழைத்துள்ளார் சஹல். அப்போது, தன்னை ‘சார்’ என அழைக்க வேண்டாம் என்று தோனி கூறியதாக சாஹல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, யுஸ்வேந்திர சஹல் பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஜிம்பாப்வேயில் தோனியை முதல்முறையாக சந்தித்தபோது அவரை மாஹி சார் என அழைத்தேன். சிறிது நேரத்துக்குப் பின் என்னை அவர் அழைத்தார். அப்போது,  மாஹி, தோனி, மகேந்திர சிங் தோனி, அண்ணா என எப்படி வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடு. ஆனால், சார் என்று மட்டும் கூப்பிடாதே என தோனி கூறினார் என்று அந்தப் பேட்டியில் சாஹல் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் கடந்த 2014-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்