சானியா மிர்சாவிடம் அத்து மீறிய பிரபல கிரிக்கெட் வீரர்!!கணவர் சோயிப் மாலிக் பரபரப்பு புகார்!அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம் …!

Default Image

வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரகுமான் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related image

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஐதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் கை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரகுமான் நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இது அவர் கூறுகையில், கடந்த 4 வருடத்துக்கு முன் என் மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச வீரர் சபீர் ரகுமான் எனது மனைவியிடம்முறைதவறி நடக்க முயன்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.மேலும் இது பற்றி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

Image result for sania mirza sabbir rahman

இந்நிலையில் சோயிப் மாலிக் தெரிவித்துள்ள இந்த புகார் நிரூபிக்கப்பட்டால், வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரகுமானுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்கால தடைவிதிக்கப் படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக பேஸ்புக்கில்,ரசிகரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் அவருக்கு நேற்றுதான்6 மாதம் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்