"சாதனை வெற்றி பெற்ற வங்கதேம்"கடுப்பாகி கொச்சை படுத்தும் ஆஸ்திரேலியா வெடிக்கிறது சர்ச்சை..!!

Default Image
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 முதல் 30வரை டாக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வீழ்த்தி சாதனைப் படைத்தது. இதைவைத்துத்தான் இப்போது புதிய சர்ச்சை மூண்டுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி வரலாற்றில் இது நீங்காக் கறையாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 260 ஆல் அவுட்டாக ஆஸ்திரேலியா 217 ரன்களுக்குச் சுருண்டது. மீண்டும் வங்கதேசம் 221 ரன்களுக்கு மடிய ஆஸி. அணிக்கு வெற்றி இலக்கு 265 ரன்கள். ஆனால் வார்னர் 112 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்கள் சொதப்ப 244 ரன்கள் வரை நெருக்கமாக வந்து தோற்றது. ஷாகிப் அல் ஹசன் 11 விக்கெட்டுகளுடன் ஆல் ரவுண்ட் திறமையையும் வெளிப்படுத்தினார்.
அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் பெர்பாமன்ஸ் மேனேஜர் பாட் ஹோவர்ட், ஆஸ்திரேலியத் தோல்வியை கடுமையாக விமர்சித்ததோடு, வங்கதேச வெற்றியை மிகவும் சிறுமைப்படுத்தும் தொனியில், வங்கதேச வீரர்களையும் அவமதிப்பாகப் பேசியுள்ளமை இப்போது சர்ச்சையாகியுள்ளது.
ஜிடன் ஹெய் என்பவர் எழுதிய ‘கிராஸிங் த லைன்’ என்ற புத்தகத்தில் பாட் ஹோவர்ட் ஆஸி. அணி தோல்வியை கடுமையாகப் பார்த்ததோடு வங்கதேச அணி வெற்றியை கடுமையாக சிறுமைப்படுத்தியது பற்றி எழுதியுள்ளார்.
அதில் பாட் ஹோவர்ட், “டாக்கா விடுதி ஒன்றின் உணவுச்சாலையில் நான் அமர்ந்திருந்தேன். இந்தத் தோல்வி என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இது குறித்து எந்த ஒரு விமர்சனத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். தேசிய அணியின் ஆட்டத்தைப் பொறுத்தே கிரிக்கெட் ஆஸ்த்ரேலிய செயல்பாடுகள் மதிப்பிடப்படும். எங்கள் மீது நிறைய கேள்விகள் எழுப்பப்படும்” என்று கூறியவர் திடீரென வெற்றி பெற்ற வங்கதேச அணியையும் அதன் வீரர்களையும் மிகவும் சிறுமைப்படுத்தும் தொனியில், “நம்மை (ஆஸி.யை) வீழ்த்திய அணியின் (வங்கதேச) பல வீரர்கள் நம் உள்நாட்டு கிரிக்கெட்டில் மாகாண அணிக்குள் கூட நுழைய முடியாத தரமுள்ளவர்கள்தான்” என்று கூறியுள்ளதாக பாட் ஹோவர்ட் பற்றி அந்தப் புத்தகத்தில் வெளியானது இப்போது வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கிராஸிங் த லைன் என்ற புத்தகம் இந்த மாதம் வெளியாகிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்