சாதனை படைத்த விராட்கோலி..! டோனியை பின்னுக்கு தள்ளினார்..!
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லேயில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார். 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். கேப்டனாக விராட் கோலியின் 52-வது போட்டி இதுவாகும்.இந்த போட்டியில் கோலி 14 ரன் அடித்திருக்கும்போது கேப்டன் பதவியில் இருந்து விரைவாக 3000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்க்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் 60 இன்னிங்சிலும் ,டோனி 70 இன்னிங்சிலும், கங்குலி 74 இன்னிங்சிலும், கிரேம் ஸ்மித் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 83 இன்னி்ங்சிலும் இந்த சாதனையை படைத்தார்கள்.