ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டி.ஆர்.எஸ் முறையால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது.இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர் 41 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்வது குறித்து எதிர்முனையில் நின்ற கேப்டன் பிளிஸ்சிஸ்சுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அப்பீல் செய்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து லெக்–ஸ்டம்புக்கு சற்று மேலாக செல்வது தெரிய வந்ததால், தீர்ப்பு மாற்றப்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்றார். டி.ஆர்.எஸ். முறைப்படி 15 வினாடிக்குள் அப்பீல் செய்ய வேண்டும். ஆனால் மில்லர் 18 வினாடிகள் எடுத்துக் கொண்டது உள்ளூரில் இந்த போட்டியை ஒளிபரப்பிய பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுட்டிகாட்டியது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும் டி.ஆர்.எஸ். அப்பீலுக்குரிய நேரத்தை நடுவர்கள் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…