சர்ச்சைக்குரிய பேச்சு பம்மிய இந்திய கேப்டன் விராட் கோலி….!!
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் மிகவும் ரசிப்பேன் என்று ரசிகர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவால் கோலி கடும் கோபத்திற்கு உள்ளானார். ‘மற்ற நாடுகளை நேசித்துக்கொண்டு அந்த ரசிகர் ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது வாழலாம்’ என்று கோலி சாடினார். கோலியின் கருத்து சர்ச்சையை கிளப்பியது.
விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்த நிலையில், மழுப்பலாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். விராட் கோலி கூறியதாவது: “ ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன். என்னை விமர்சனம் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுத்தான் பேசினேன்.
என்னைப் பொறுத்தவரை எந்த நாட்டு கிரிக்கெட் வீரரை யாரும் ரசிக்கலாம். அதில் தேர்வு செய்வதில் நான் சுதந்திரம் இருப்பதை விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com