சமர்பிக்கிறேன்..! டெஸ்ட் வெற்றியை கேரளா மக்களுக்கு ..!வெற்றி பெற்ற பரிசு தொகையை..! நிவாரண நிதியாக அளிக்கிறேன்..!விராட் கோலி..!
வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கும், இங்கிலாந்து 161 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர், 521 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்கியது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது..203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
இந்திய அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக பூம்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,3வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி என தெரிவித்துள்ளார்.மேலும் இந்திய வெற்றிக்கான பரிசுத்தொகையை கேரளா வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக அளிப்பதாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
DINASUVADU