"சச்சின் வாழ்நாள் ,லாரா கடைசி நாள்"ஷேன் வார்ன் நெகிழ்ச்சி..!!

Default Image
வாழ்நாள் முழுவதும் பேட் செய்யச் சொல்லி ரசிக்க வேண்டுமென்றால் சச்சினையும், கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என்றால் அதற்கு லாராவையும் தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் நெகிழ்ந்துள்ளார்.
ஆனால், தன்னுடைய காலக் கட்டத்தில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதத்துக்குள் வரவில்லை என்று வார்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, தனது புதிய சுயசரிதையான “நோ ஸ்பின்” என்ற புத்தகம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நம்முடைய கால கட்டத்தில், என்னுடைய வாழ்கையில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகிய இருவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுவேன். ஒரு டெஸ்ட் தொடரில் கடைசி நாளில் யாராவது சதம் அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், நான் லாராவைத் தான் களத்துக்கு அனுப்புவேன்.
ஆனால், வாழ்நாள் முழுவதும் பேட் செய்து ரசிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், அது சச்சினின் விளையாட்டை மட்டும்தான். சச்சின் பேட் செய்யும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.கடந்த 1998-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஷார்ஜா கோப்பை முத்தரப்பு தொடரில் சச்சின் தனியாக ஆளாக இருந்து தனது பேட்டில் ஆவர்த்தனம் செய்ததை என்னால் மறக்க முடியாது. எனக்குச் சிறப்பு சிகிச்சையைப் பேட்டால் சச்சின் அளித்தார். அந்தக் காயம் எனக்கு வலியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், அப்போது, இந்திய அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களான சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண், சேவாக் இருந்தார்கள். அந்த நேரத்தில் இந்திய அணியை வழ்த்துவது என்பது கடினம். நான் என்னதான் சிறப்பாக பந்துவீசினாலும், என்னைக்காட்டிலும் அவர்கள் சிறப்பாக பேட் செய்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.
என்னுடைய சுயசரிதை புத்தகம் என்பது, என்னுடைய சுயவாழ்க்கை, கிரிக்கெட் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் புத்தகத்தை முகத்திலடிக்கும் நேர்மையுடன் எழுதியிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, என்னுடைய உறவுகள், நட்புகள், குடும்பம், குழந்தைகள், கிரிக்கெட் வாழ்க்கை அனைத்தையும் பற்றி இருக்கும் இவ்வாறு ஷேன் வார்ன் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்