சச்சின் நெகிச்சியான ட்வீட் ” உலகை வென்று வா சாரா “

Default Image

எங்களை பெருமை படுத்திவிட்டாள் எனது மகள் சாரா -சச்சின் நெகிழ்ச்சி….!

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது….

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது….

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவருக்கு சமூகலைதலங்களில் ரசிகர்கள் அதிகம். இவர் தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் எதில் பதிவிட்டாலும் அது ரகிகர்கள் மத்தியில் வைரலாக பரவும். சமீபத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட  சாராவின் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவியது.

View image on Twitter

இதை தொடர்ந்து, பலரும் சாரா பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக கிசுகிசுக்களை பரப்பிவிட்டனர். சாரா மும்பையில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்தவர். தன் அம்மாவை போன்று லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் வாங்கிவிட்டார். மகளின் இந்தப் பெருமித தருணத்தைக் காண சச்சின் மற்றும் அஞ்சலி லண்டன் சென்றனர். சாரா தனது பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் `நான் என்ன செஞ்சிருக்கேன் தெரியுமா’ என்று பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 20 வயதான சாரா பட்டமளிப்பு கறுப்பு அங்கி, தொப்பியில் க்யூட்டாக இருந்தார். சுட்டி பெண் சாராவின் புகைப்படங்களுக்கு வழக்கம்போல் லைக்ஸ் குவிந்தன… வாழ்த்துகள் சாரா!

View image on Twitter

சாரா பட்டம் பெற்றது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் `நேற்று தான் லண்டன் பல்கலைக்கழகத்தில் சேர வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது போல் இருக்கிறது. அதற்குள் நாள்கள் ஓடிவிட்டன. நீ பட்டமும் வாங்கிவிட்டாய். என்னையும் உன் அம்மாவையும் பெருமைப்படுத்திவிட்டாய். சுதந்திரமாகப் போ… உலகை வென்று வா சாரா…’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

DINASUVADU 

 

Tags:

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்