"சச்சின் டெண்டுல்கர் என்னை அழ வைத்தார்"ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி..!!
பிக்பாஸ்-12 ரியால்டி ஷோ-வில் கலந்து கொண்டுள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் 2011 உலகக்கோப்பை குறித்த ஒரு சம்பவத்தை சகபங்கேற்பாளர் அனுப் ஜலோடாவுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தோனி தலைமையில் இளம் இந்திய அணி ஆரம்ப டி20 உலகக்கோப்பையை 2007-ல் வென்ற போதும் ஸ்ரீசாந்த் பங்களிப்பு முக்கியமாக அமைந்தது, 2011-ல் தோனி தலைமையில் உலகக்கோப்பையை இந்திய அணி 2வது முறையாக வென்ற போதும் ஸ்ரீசாந்த்தின் பங்களிப்பை மறக்க முடியாது.

2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கி வாழ்நாள் தடையை எதிர்கொண்டு வருகிறார் ஸ்ரீசாந்த்.
இவர் அஜித் சந்திலா, அன்கீட் சவான் ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்து பிறகு விடுவித்தனர், கேரள உயர் நீதிமன்றம் இவரது தடையை ரத்து செய்தது, ஆனால் பிசிசிஐ எதிர்மனு செய்தவுடன் தடை மீண்டும் நடைமுறைக்க்கு வந்தது.
இந்நிலையில் பிக்பாஸ்-12 நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளர் அனுப் ஜலோடாவிடம் ஸ்ரீசாந்த் பகிர்ந்து கொண்ட போது, “சச்சின் டெண்டுல்கர் தொடர்பான ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2011 உலகக்கோப்பை முடிந்து 1-2 ஆண்டுகள் இருக்கும். ஒரு நேர்காணல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
நேர்காணல் செய்தவர் 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் அனைவர பெயரையும் சச்சினிடம் கேட்டார் என் பெயரைத் தவிர. நேர்காணல் முடியும்போது சச்சின் டெண்டுல்கர் தானாகவே என் பெயரைக் குறிப்பிட்டு ஸ்ரீசாந்த் பங்களிப்பும் முக்கியமானது என்றார், அதைக் கேட்டவுடன் மனம் உடைந்து நெகிழ்ச்சியில் அழுதுவிட்டேன்” என்றார் ஸ்ரீசாந்த்
DINASUVADU