“காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதாக ” பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்திற்கு, இந்திய வீரர்கள் காம்பீர், சுரேஷ் ரெய்னா மற்றும் முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ” நம் நாட்டை நிர்வகிக்கவும், இயக்கவும் நம்மால் இயலும். வெளியிலிருந்து ஒருவர் தெரிந்து கொள்ளவோ, நாம் என்ன செய்ய வேண்டும் என கூறவோ தேவையில்லை” என காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இதற்கு முன் , ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்தியக் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் தனது ட்விட்டரில் “காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன்.
நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்,சுரேஷ் ரெய்னா பதிலடி கொடுத்த நிலையில் தற்போது சச்சினும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…