சச்சின் சொன்ன கருத்தால் முக்குடைந்த அப்ரிடி…!சச்சினையே காண்டாக்கிய அப்ரிடி…!

Default Image

“காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதாக ” பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்திற்கு, இந்திய வீரர்கள் காம்பீர், சுரேஷ் ரெய்னா மற்றும் முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ” நம் நாட்டை நிர்வகிக்கவும், இயக்கவும் நம்மால் இயலும். வெளியிலிருந்து ஒருவர் தெரிந்து கொள்ளவோ, நாம் என்ன செய்ய வேண்டும் என கூறவோ தேவையில்லை” என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Related image

இதற்கு முன் , ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்தியக் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவும் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் தனது ட்விட்டரில் “காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் மூதாதையர்கள் பிறந்த புண்ணிய பூமி அது. எங்கள் காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் ஆக்கிரமித்து போர் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திடம், அவற்றை நிறுத்துமாறு ஷாகித் அஃப்ரிடி சொல்லுவார் என்று நம்புகிறேன்.

Image result for raina vs afridi

நாங்கள் விரும்புவது வன்முறையை அல்ல; அமைதியை மட்டுமே” என்று கூறியுள்ளார்.

Image result for gambhir vs afridi

ஏற்கனவே ஷாகித் அஃப்ரிடியின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்,சுரேஷ் ரெய்னா பதிலடி கொடுத்த நிலையில் தற்போது சச்சினும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்