சச்சின் காட்டிய மிகசிறந்த வேக பந்துவீச்சாளர்கள் இவர்கள்தான்..!

Default Image

தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டே மிகவும் முழுமையானது என்று கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள வேகப்பந்து வீச்சு யூனிட்டுதான் இங்கிலாந்து தொடருக்கான மிகவும் முழுமையானது. என்னுடைய மதிப்பீட்டின்படி, இந்த யூனிட்டின் தாக்குதல் மிகவும் சிறந்ததாக இருக்கும். ஸ்விங் பவுலரான புவனேஸ்வர் குமார். மிகவும் உயரம் கொண்ட இசாந்த் சர்மா, பந்தை தரையில் பலமாக தாக்கும் பும்ரா, மிகவும் திறமை வாய்ந்த வேகமாக வீசும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நம் பெற்றுள்ளோம். பல்வேறு தரப்பட்ட பந்து வீச்சை கொண்டு சிறந்த காம்பினேசன்.

தற்போதுள்ள இந்திய அணி தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பெரும்பாலான நேரத்தில் அதிக அளவில் பேட்டிங் செய்கிறார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தற்போது அதிக அளவில் ரன்கள் அடிக்க உதவியாக இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஐந்தாறு ஓவர்கள் வீசுவது பெரிய விஷயம் அல்ல. முக்கியமான நேரத்தில் பந்து வீச்சாளர்கள் ரன்கள் அடிப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்