சச்சினின் வாழ்த்து…சேவாக்கின் பதில்…ரன்களால் பேசும் சிசியர்கள்..!!

Default Image
இந்திய முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் 40வது பிறந்த தினத்தன்று பலரும் சேவாகுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர், ஹர்பஜன் சிங், சேவாகை தங்கள் கால ரிச்சர்ட்ஸ் என்று புகழாரம் சூட்டினார், ஆனாலும் சேவாகின் லட்சிய ஆளுமை, கதாநாயக வீரர் சச்சின் வாழ்த்து கிடைப்பது போலாகுமா?ஆகவே சச்சின் ட்வீட்டில் ருசிகரமாகப் பதிவிட, அதை விஞ்சும் வகையில் சேவாக் பதில் ருசிகர ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சச்சின், சேவாகுடன் தான் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு தன் ட்வீட்டில்  “141.211416441116464; இது ஜிபிஎஸ் லொகேஷன் அல்ல, என் நண்பர் விரேந்திர சேவாக் இப்படித்தான் ரன்களை விளாசுவார்! ஹாப்பி பர்த் டே வீரூ. (‘Veer’u)” என்று பதிவிட்டு அசத்த.
 
ட்வீட் உலகின் நட்சத்திரமான சேவாக் விடுவாரா அவர் பதிலுக்கு ∞ என்ற ‘எல்லையற்றது’ (infinity) என்பதைக் குறிக்கும் குறியீட்டை இட்டு, சேவாக், “இது வெறும் குறியீடு அல்ல, ரன்கள் அடிப்பதென்றால் நம் கடவுள் சச்சின் அப்படித்தான் ரன்கள் எடுப்பார். உங்களது படைப்பார்த்தமான வாழ்த்துக்களுக்கு நன்றி சச்சின் பாஜி” என்று ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்