கோலி சதமடித்த நிலையிலும் சொதப்பிய இந்தியணி……..!!மே.தீவுகள் அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது.
இந்தியாவிற்கு சுற்று பயணம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ‘டை’ ஆனது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இன்று புனேயில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 283 ரன்கள் எடுத்தது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.
மேலும் இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா நீக்கப்பட்டு பும்ரா, புவனேஷ்வர், கலீல் அகமது அணிக்கு திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேபியன் ஆலன் அறிமுக வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாவெல் 21, ஹேம்ராஜ் 15, ஹெட்மயர் 37 ரன்கள் எடுத்தனர். ஹோப் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் நர்ஷ் 40 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையி 284 ரன் தான் வெற்றி இலக்கு என்று விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 43 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி இப்போட்டியிலும் சதம்(107 ரன்) அடித்தபோது இத்தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்க்து.
DINASUVADU