இந்திய வீரர் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஆச்சரியம் ததும்ப தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கிரிக்கெட் வீரருமான தமிம் இக்பால். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது இருந்த போதிலும், கையில் கட்டுப்போட்டுக்கொண்டு ஒருகையால் பேட் செய்தவர் தமிம் இக்பால்.இவருடைய இந்த தீவிரமான கிரிக்கெட் பேட்டிங் திறமை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார். கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி, 204 இன்னிங்ஸ்களில் ஒருநாள், கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்ட உள்ளார் சச்சின் டெண்டுல்கர் 264-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.