கோலிக்கு சரியான பார்ட்னர் ரவிசாஸ்திரி தான் …!ஸ்மித், வார்னர் தடையால் டெஸ்ட் தொடரில் இந்திய அணியே வெற்றிபெறும் …!இயன் சாப்பல்

Published by
Venu

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இந்நாள் வர்ணனையாளர் இயன் சாப்பல், ஸ்மித், வார்னருக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கோலி படை அங்கு நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இயன் சாப்பல் கூறியதாவது,கிரிக்கெட் ஆஸ்திரேலியா சரியாகவே சிந்தித்துள்ளது, வார்னருக்கும் ஸ்மித்துக்கும் தடை மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெரிய அனுகூலம் செய்துள்ளது

ஆஸ்திரேலிய மக்களிடம் ஒரேயொரு கெட்டபெயர் எடுத்து விடக்கூடாது அது ‘ஏமாற்றுக்காரன்’ என்ற பெயர்தான். எனவே இந்தியாவுக்கு எதிரான தொடரில் வார்னர், ஸ்மித் எந்த மைதானத்தில் இறங்கினாலும் ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கேலி செய்து கூச்சல் எழுப்புவது நிச்ச்யம். அது அவர்கள் தன்னம்பிக்கைக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இமேஜுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும்.

எனவே இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஆடாமல் இருப்பதே நல்லது. எப்படியிருந்தாலும் அவர்கள் மீண்டும் கிரிக்கெட் பற்றி சிந்திக்க நாட்கள் பிடிக்கும்.

ஊதிய விவகாரத்தின் போது வெளிப்படையாக பேசிய வார்னரை ஒழித்துக் கட்டுவதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா காரணங்களைத் தேடி வந்தது. இப்போது சவுகரியமாகப் போய்விட்டது, எனவே வார்னர் மீண்டும் ஆஸி.க்கு ஆடுவது கடினமெ. ஸ்மித் வருவார் ஆனால் இனி கேப்டனாக அவர் நினைத்துப் பார்க்க முடியாது.

எனவே நான் இந்திய டெஸ்ட் தொடர் வெற்றியை எதிர்பார்க்கிறேன், (1948 முதல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணித்து வரும் இந்திய அணி இன்னும் ஒரு தொடரைக்கூட அங்கு வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இந்தியா எளிதில் வெல்லுமா என்பது எனக்குத் தெஇர்யவில்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனாலும் ஆஸ்திரேலியாவிடம் சிறந்த பவுலிங் இருப்பதால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினமாகக் கூட இருக்கலாம்.

நல்ல பந்து வீச்சு இருந்தால் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய பலம், 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சு லெஜண்ட் ஆண்டி ராபர்ட்ஸ் போல் சிந்திக்க வேண்டும். அவர் எப்போதும் ஒன்றைக் கூறுவார், அதாவது எந்த ரன் எண்ணிக்கையில் எதிரணி எங்களை அவுட் ஆக்குகிறார்கள் என்பதல்ல விஷயம் எந்த ரன் எண்ணிக்கையாக இருந்தாலும் அதை விட குறைந்த ரன்களில் நாங்கள் எதிரணியை சுருட்டி விடுவோம் என்பார் இதுதான் ஆண்டி ராபர்ட்ஸ் ரக சிந்தனை என்பது.

கோலியுடன் இருப்பதற்கு ரவிசாஸ்திரி சரியான நபர்தான். கோலி, ரவிசாஸ்திரி இருவருமே ஆக்ரோஷமானவர்கள். ரவிசாஸ்திரி ஆக்ரோஷமாக யோசிப்பவர். எனவே கோலியுடன் இணைந்துப் பணியாற்ற சிறந்த நபர் ரவிசாஸ்திரிதான் என்று  இயன் சாப்பல் கூறினார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago