முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான் ஜோடி அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர்.அதன் பின்னர் களமிறங்கிய சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடி 77(50) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது .சஹல் அதிக பட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.
ரோஹித் சர்மா அரைசதம்:
அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் ருபெல் பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நஷ்முல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.மேலும் இது ரோஹித் சர்மாவின் 14வது டி20 அரைசதமாகும்.மனீஷ் பண்டே 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் . விஜய் சங்கர் 17(19) ஆட்ட மிளக்க மற்றும் தினேஷ் கார்த்திக் 29(8) மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் கடைசி ஒரு பந்து மிஞ்சிய நிலையில் 6 அடித்து இழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர் .
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…