கிரிக்கெட் ஆட்டம் எதுவா இருந்தாலும்…..சூதாட்டக்காரர்கள் இந்திய புக்கிகளே…..ஐசிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!

Default Image
இந்திய புக்கிகளே எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் அதில் ஊழல் நிரம்பிய பெரிய சூதாட்டக்காரர்கள் பெரும்பாலும்  இருக்கின்றனர் என்று ஐசிசி அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
Image result for international cricket council SECRETARY MARSHAL
இஹ்நிலையில் தான் இந்த வாரத் தொடக்கத்தில் சனத் ஜெயசூரியா ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 2க்கும் மேற்பட்ட பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்ட வீரர்களில் உயர்மட்ட வீரராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related image
ஜெயசூரியா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இல்லாவிட்டாலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தது மற்றும் விசாரணையை தாமதப்படுத்துவது, அதுமட்டுமல்லாமல் ஆதாரங்களை மறைப்பது போன்ற பல அடுக்கான குற்றச்சாட்டுகள் ஜெயசூரியா மீது ஐசிசி தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஐசிசி பொதுமேலாளர் மார்ஷல் தெரிவிக்கையில் சமீபத்தில் இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் அணுகிய செயல்பூர்வமான கிரிக்கெட் புக்கிகள், ஊழல்வாதிகள், சூதாட்டக்காரர்கள் ஒன்று இலங்கை உள்நாட்டுக் காரர்களாக இருக்கின்றனர் அல்லது பெரும்பாலும் இந்திய புக்கிகளாக இருக்கின்றனர் என்று  தெரிவித்தார்.
Image result for INDIA CRICKET PUKKING
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா இந்திய புக்கி அனுப்பட்டிடமிருந்து போட்டிகளை பிக்ஸ் செய்வதற்காக லஞ்சம் பெற்றதை பகீரங்கமாக ஒப்புக் கொண்டது இந்திய புக்கிகளின் ஊழல் ஈடுபாடு குறித்து எந்த வித அதிர்ச்சித தகவலையும் அளிக்கவில்லை என்றாலும் இந்திய புக்கிகள் தான் உலகிலேயே மோசமான் சூதாட்டக்காரர்களாக இருப்பதாக தற்போது ஐசிசி வெளியீட்டில் தெரியவந்திருப்பது இந்தியாவிற்கும்,இந்திய கிரிக்கெட்டிற்கும் கிடைத்த அவமானத்துக்குரிய ஒன்றாகும்.
Image result for india cricket jadeja
கடந்த 2000-ம் ஆண்டு ஹேன்சி குரோனியே, சலீம் மாலிக், அசாருதீன், அஜய் ஜடேஜா உள்ளிட்ட பெரிய பெரிய பெயர்களெல்லாம் சிக்கிய போது கூட இந்த இந்திய புக்கிகளே கிரிக்கெட்டில் ஊழலுக்குப் பிரதான காரணமாக இருந்தது தெரியவந்ததுள்ளது.
இந்நிலையில் வீரர்களுக்கு அறிவுறுத்தும் விதத்தில் ஒரு அறிவுறுரையை ஐசிசி தெரிவித்துள்ளது.அதில் கிரிக்கெட்டில் வீரர்களை சூதாட்டத்தில் சிக்கவைக்கும் ஆசைகாட்டி மோசம் செய்யும் புக்கிகள் பெயர்களை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம், ஏனெனில் வீரர்கள் இனிமேலாவது சுதானமாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் புதிய புதிய தகவல்கள் எங்களுக்கு வரத்தொடங்கியுள்ளன, இப்போதைக்கு 12-20 புக்கிகள் உலா வருகின்றனர், இதில் ஒரு 6 புக்கிகள் பற்றி வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் ஆண்களும் உள்ளனர் 2 பெண்களும் உள்ளனர்” என்கிறார் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்