இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்சியாக மொயீன் அலி 6,பட்லர் 69,ஜோர்டன் 0 ரன்களில் வெளியேறினர்.20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.பின்னர் களமிறங்கிய இந்திய 160 என்ற வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் எட்டியது.இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்துவரை ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் அடித்தார்.இது இவருக்கு இரண்டாவது சதம் ஆகும்.மேலும் ரோகித் 32, தவான் 4,விராட் கோலி 20 ரன்கள் அடித்தனர்.இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…