கலீத் அகமதுவின் அதிரடியில் காலியான வெஸ்ட் இண்டீஸ்…….ஸ்டெம்பிங்கில் தெறிக்கவிட்ட தோணி….பராபட்சமின்றி பழிதீர்த்தது இந்தியா…!!!
வெஸ்ட் இண்டீஸ் இந்தியா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் கலீத் அகமதுவின் அதிரடி பந்து வீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை உறுதிசெய்து பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா ,ஷிகர் தவான் ஜோடி அணிக்கு தொடக்கத்தை கொடுத்தது. இந்த ஜோடிகளை 11ஓவரில் 5 வது பந்தில் எதிரணி வீரர் பவேல் பிரித்தார்.
ஷிகர் அவுட்டானதை தொடர்ந்து ரோஹித் ஷர்மாவுடன் அதிரடி வீரர் கோலி கைக்கொடுக்க அது அணிக்கு கொஞ்சம் பலத்தை தந்தது பலே வீரர்கள் பக்கத்தில் இருக்கின்றனர் எப்படியும் ஆட்டத்தில் செஞ்சுரிக்கு பஞ்சமிருக்காது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை 16 வது ஓவரில் கலைத்து அதிர்ச்சி கொடுத்தார் எதிரணி வீரர் கேமர் ரோச் பந்து அவர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி.
இருப்பினும் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ரோஹித்தும் அம்பத்தி ராயூடுவும் களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சுகளை நாலப்புறமும் பறக்கவிட்டனர். ரசிகர்களின் செஞ்சுரி எதிர்பார்ப்பை கோலி ஏமாற்றிய நிலையில் அதிரடியாக விளையாடி அதை ரோஹித் நிறைவேற்றினார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அவர், 137 பந்துகளில் 162 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்கு பின் களமிறங்கிய தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்காக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் எடுக்க 1 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில் 9,999 ரன் எடுத்திருந்தபோது தோனி ஆட்டம் இழந்தார். இதனால் தனது சாதனையைய் ஒரு ரன்னில் தோனி தவறவிட்டார்.இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.
இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்களை குவித்தது. இந்நிலையில் 378- ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹேம்ராஜ் பவல் ஜோடி ஓப்பனிங் கொடுத்தது. பொறுமையாக ரன்களை சேர்த்து கொண்டிருந்த இந்த ஜோடியை 4வது ஓவரில் புவனேஸ்வர் குமார் பிரித்தெடுத்தார். அடுத்ததாக அணிக்கு முந்தைய ஆட்டங்களில் பெரும் பலமாக இருந்த ஹோப் களமிறங்கினார்.நம்பிக்கையுடன் இறங்கிய ஹோப்பை குல்தீப் யாதவ் நடையைக்கட்ட வைத்தார் சதமடிக்கும் அவர் இந்த போட்டியில் ரன்கள் ஏதும் எடுக்கவிடாமலே வெளியேற்றினார். அடுத்தடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வெளியேற்றும் பொறுப்பை இந்திய வீரர் கலீல் அகமது எடுத்துக்கொண்டார்.
அதன்படி அந்த அணி 10வது ஓவரில் 45-4 என்ற கணக்கில் ஊஞ்சலாடிய பொழுது அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக்கெட்ட வெஸ்ட் இண்டீஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.இதனிடையே அணிக்கு கடைசி கட்டத்தில் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஹோல்டர் தனது பங்கிற்கு 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்களில் சுருண்டது. கடந்த போட்டிகளில் தவறவிட்ட வாய்ப்பை இந்தப் போட்டியில் துராரித்து கொண்டு பயன்படுத்திக்கொண்டார் கலீல் அகமது. இவருடைய பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் மலமலவெனவெஸ்ட் இண்டீஸ் சுருண்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே தோணியின் சுவாரசிய தகவலும் வெளிவந்துள்ளது.ஜடேஜா வீசிய பந்தை லாபமாக கைகாண்ட தோணி 0.08 நிமிடத்தில் ஸ்டெம்மிங் செய்து ரசிகர்களை ரசிக்கப்படி செய்தார்.இந்த ஸ்டெம்மிங் கண்மூடி திறப்பதற்குள் இந்த ஸ்டெம்மிங்கை செய்தார்.இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதலங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.