கடைசி டெஸ்டில் சாதனை படைத்த சாதனை வீரர் …!வேகப்பந்தில் இனி இவருதான் டாப் …!

Default Image
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுடனான  5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்று 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில்  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 3 விக்கேட்டாய் வீழ்த்தினார்.இதனால்  டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் இருந்த மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) கீழே தள்ளி இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் அவரது இடத்தை பிடித்துள்ளார். மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 564 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்