கடைசி டி20:அசத்திய இந்தியா..!ஆட்ட நாயகன் ‘சைனி-தொடர் நாயகன் ‘ராகுல்’- தேர்வு..!

- இலங்கையை 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா
- ஆட்ட நாயகனாக நவ்தீப் சைனி மற்றும் தொடர் நாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நடைபெற்றது.இரு அணிகள் இடையிலான முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியாவும்-சமன் செய்யும் நோக்கில் இலங்கையும் இன்று களமிரங்கியது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.அடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் கோலி (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்து 202 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலக்கை விரட்ட இலங்கை களமிரங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களை அதிரடி காட்டி ஆப் செய்தார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் இதனால் அந்த அணி 15.5 ஓவர்களில் 123 ரன் கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்தியா2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரை கைப்பற்றியது.இன்றைய ஆட்டத்தில் 36 பந்துகளுக்கு 54 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் தொடர் நாயகனாகவும், சிறப்பாக பந்து வீசிய நவ்தீப் சைனி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.