கங்குலியை முறியடித்த ரோஹித் சச்சினை தவறிவிட்டார்..
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கங்குலியின் சாதனையை முறியடித்து சச்சின் சாதனையை தவறவிட்டுள்ளார்.
இந்தியா , வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் போட்டியில் 8 விக்கெட் இந்தியா வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.அதில் 15 பவுண்டரியும் , 8 சிக்ஸரும் அடித்து அசத்தினார். தற்போது ரோஹித் சர்மா 194 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதில் நேற்றைய ஆட்டத்தில் 8 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா கூடுதலாக இரண்டு சிக்ஸர் அடித்து இருந்தால் குறைந்த போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தி புதிய சாதனை படைப்பார்.அந்த வகையில் MS.டோனி 217 சிக்ஸர்களோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.இரண்டாம் இடத்தில் சச்சின் 195 சிக்ஸர்களோடும் ,ரோஹித் சர்மா 194 சிக்ஸர்ரும் , சவுரவ் கங்குலி 190 சிக்ஸர்களோடு நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
DINASUVADU