இந்திய அணி,இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணி மிகக்குறைந்த பந்துக்கள் வீசி மாபெரும் வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டி முதலிடத்தை பிடித்துள்ளது. குறைந்த பந்துக்கள் வீசி இந்திய அணி வெற்றிபெற்ற மேலும் சில போட்டிகளின் விவரங்கள் இதோ
399 பந்துக்கள், இந்தியா vs ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018*
554 பந்துக்கள், இந்தியா vs ஆஸ்திரேலியா, மும்பை, 2004
569 பந்துக்கள், இந்தியா vs பங்களாதேஷ், தாகா, 2007
596 பந்துக்கள், இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2005
இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமே 212 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் படுதோல்வி அடைந்துள்ளனர். இதே போல் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் எதிரணியினர் மிகக்குறைந்த ரன்கள் எடுத்த ஆட்டங்களின் விவரங்கள் இதோ,
212 ரன்கள், ஆப்கானிஸ்தான், 2018*
230 ரன்கள், இங்கிலாந்து, 1986
241 ரன்கள், நியூசிலாந்து, 1968
242 ரன்கள், இங்கிலாந்து, 1936
254 ரன்கள், நியூசிலாந்து, 2002
அதேபோல் இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்து இரண்டாவது நாளில் மட்டும் மொத்தம் 24 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இப்படி ஒரே நாளில் அதிக விக்கெட்டுகள் விழுந்த டெஸ்ட் போட்டிகளின் விவரங்கள் இதோ,
27 விக்கெட்டுகள், இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 1888 (Day 2)
25 விக்கெட்டுகள், ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1902 (Day 1)
24 விக்கெட்டுகள், இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 1896 (Day 2)
24 விக்கெட்டுகள், இந்தியா vs ஆப்கானிஸ்தான், 2018 (Day 2)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுதான் அறிமுக ஆட்டமாகும். இந்திய அணியுடனான தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்துள்ளது. இதே போல அறிமுக ஆட்டங்களில் சொற்ப ரன்கள் குவித்த அணிகளின் விவரங்கள் இதோ
84 ரன்கள், தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, 1889
91 ரன்கள், பங்களாதேஷ் vs இந்தியா, 2000 +
103 ரன்கள், ஆப்கானிஸ்தான் vs இந்தியா, 2018 +
104 ரன்கள், ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1877 +
108 ரன்கள், இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 1877 +
109 ரன்கள், ஆப்கானிஸ்தான் vs இந்தியா, 2018
112 ரன்கள், நியூசிலாந்து vs இங்கிலாந்து, 1930
ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குறைந்த ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது. இதே போல அறிமுக ஆட்டங்களில் குறைந்த ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த அணிகளின் விவரங்கள் இதோ
27.5 ஓவர்கள், ஆப்கானிஸ்தான் vs இந்தியா, 2018
38.4 ஓவர்கள், ஆப்கானிஸ்தான் vs இந்தியா, 2018 +
46.3 ஓவர்கள், பங்களாதேஷ் vs இந்தியா, 2000 +
47.1 ஓவர்கள், நியூசிலாந்து vs இங்கிலாந்து, 1930
47.2 ஓவர்கள், அயர்லாந்து vs பாகிஸ்தான், 2018
மேற்கண்ட விவரங்களில் + என்பது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை குறிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…