ஒரு வழியாக நீங்கியது சச்சினின் சாதனைக்கு இருந்த ஆபத்து …!சாதனையை துரத்திய குக் ஓய்வு…!
அலஸ்டர் குக் ஓய்வு முடிவால் சச்சினின் சாதனைக்கு இருந்த ஆபத்து நீங்கியுள்ளது.
அலஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவருக்கு வயது 33 ஆகும். இங்கிலாந்து அணியில் 2006ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக ஆடிவரும் குக், 159 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,225 ரன்களை குவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுபவர்.சச்சின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ளார். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் (1989 முதல் 2013 வரை) 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதம், 68 அரைசதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் சேர்த்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் ஒரு தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையை முறியடிக்க எவராலும் முடியாது என்று கருதப்படுகிறது.இங்கிலாந்து வீரரான அலஸ்டர் குக் இந்த வேளையில்தான் விஸ்வரூபம் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
குக் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் 150 டெஸ்ட் போட்டியிலேயே குவித்திருந்தார். அலஸ்டைர் குக் 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்களுடன் 12254 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு தற்போது 33 வயதே ஆவதால் 37 வயது வரை விளையாடினால் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் குக் ஆட்டத்தில் கடந்த ஒரு வருடமாக தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை துரத்திக் கொண்டிருந்த அச்சுறுத்தல் முடிவிற்கு வந்துள்ளது.