ஒரு புறம் இந்திய அணி படுதோல்வி …!மறுபுறம் சாதனைகளை பட்டியலிட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி …!

Published by
Venu

இந்திய அணி நான்காவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட், இஷாந்த், ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றி இங்கிலாந்தை 246 ரன்னில் சுருட்டினார். இதனை தொடர்ந்து  2ம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, மொயீன் அலியின் (5) பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. இருப்பினும் புஜாராவின் 15-வது சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் சேர்ந்தது.

27 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.இந்நிலையில் இங்கிலாந்து அணி 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பட்லர் 69 ரன்கள் அடித்தார்.இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனையடுத்து இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் 58 ,ரகானே51 ரன்கள் அடித்தனர் .இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து.

இந்நிலையில்  இந்த போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. மேலும், சர்வதேச அரங்கில் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையும் பெற்றார்.
அதிவேகமாக 4000 ரன்களை எட்டிய கேப்டன்கள்:
இந்திய அணி கேப்டன்  விராட் கோலி                                     -65 இன்னிங்ஸ்
முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்  பிரயன் லாரா  -71 இன்னிங்ஸ்
முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர்  ரிக்கி பாண்டிங்             -75 இன்னிங்ஸ்
முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் அயன் சாப்பல்               -80 இன்னிங்ஸ்
முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர்  ஆலன் பார்டர்               -83  இன்னிங்ஸ்
இந்தத் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 544 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில்  இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமை பெற்றார். ஒரு தொடரில் அந்நிய மண்ணில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார் கோலி.
Published by
Venu

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

16 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

2 hours ago