இந்தியா மற்றும் வெட்ஸ் இண்டீஸ் இடையே 3 தொடர் கொண்ட டி20 போட்டி நடந்து வருகிறது.இதில் 2 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.இதில் கடந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான தனது சதத்தை வெளிப்படுத்த இது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தக அமைந்தது. இதேபோல் இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சென்னை சேப்பாக்க மைதானத்தில் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா 2203 ரன் (79 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது இந்தை முறியடிக்க அவருக்கு 69 ரன்களை தேவைப்படுகிறது அது இந்த போட்டியில் சாத்திப்பாரா.? இன்று இந்த சாதனையை முறியடிக்காவிட்டால் ரோகித் ஆஸ்திரேலிய பயணம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் அவருக்கு அடுத்த சாதனையாக ரோகித் சர்மா 74 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது அவர் 330 ரன்னுடன் 4-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் (403 ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ் (384), தில்சன் (346) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த சாதனையாக இந்தியா முழுமையாக இந்த தொடரை வென்றால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.மேலும் சர்வதேச அளவில் 3-வது கேப்டன் என்ற பெருமையை சர்வதேச அளவில் பெறுவார். இதற்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த சர்பிராஸ் அகமது 5 முறையும்,ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆஸ்கர்கான் 3 முறையும் ஒயிட்வாஷ் செய்துள்ளனர்.இந்த வகையில் ரோகித் பெயரும் இடம்பெறும்.
இந்திய அணி 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஏற்கனவே 2 முறை முழுமையாக கைப்பற்றி விட்டது.இந்நிலையில் இந்தியா 2016-ல் ஆஸ்திரேலியாவையும், 2017-ல் இலங்கையையும் ஒயிட்வாஷ் செய்தது நினைவில் கொள்ளவேண்டும். தற்போது 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.இதற்கு வாய்ப்புக் கொடுக்க கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் பரபரப்பாக களமிரங்குகிறது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.தோணி இல்லாத சேப்பாகத்தை பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் உருக்கமாக தெரிவிக்கின்றனர்.
DINASUVADU
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…