ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த டென்னிஸ் வீரர்..!
தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இப்பொது இந்த போட்டி காலிறுதி நிலையை எட்டியுள்ளது. 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது.
முதலில் பெடரர் செய்த சர்வீஸ் தவறாக சென்றது. வந்த பந்தை அதே வேகத்தில் அட்டிரியன் பெடரரை நோக்கி திருப்பி அடித்தார். அந்த பந்தை கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது சில சமயத்தில் ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதுபோல், பெடரர் ஸ்ட்ரோக் வைத்தார்.
இதை கவனித்த விம்பிள்டன் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, பெடரரின் இந்த ஃ.பார்வர்டு டிஃபென்ஸ்-க்கு ஐசிசி என்ன ரேங்க் கொடுக்கும்?’’ என்று கேள்வி கேட்பதுபோன்று டுவிட் செய்திருந்தது.அந்த ட்விட்க்கு சற்றும் சளைக்காமல் ஐசிசி ஓகே என்று சொல்லி நம்பர் ஒன் என்று பதில் டுவிட் செய்திருந்தது.நம்பர் ஒன் இடத்தை கிரிக்கெட் விளையாட்டிலே இல்லாத வீரர் பெறுவது இதுவேய முதல் முறையாகும்
இதற்கிடையே சச்சின் தெண்டுல்கரும் விம்பிள்டன் டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்திருந்தார்.
Ratings for @rogerfederer's forward defence, @ICC?#Wimbledon pic.twitter.com/VVAt2wHPa4
— Wimbledon (@Wimbledon) July 9, 2018
*sigh* ok… ???? pic.twitter.com/KXnhaznxL8
— ICC (@ICC) July 9, 2018
As always, great hand-eye co-ordination. @rogerfederer, let’s exchange notes on cricket and tennis after you win your 9th @Wimbledon title ???????? https://t.co/2TNUHGn1zK
— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2018